தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

Photo of author

By Divya

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும்.

பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

ஆனால் மாதத்தில் ஒரு நாள் அதுவும் சம்பள பணம் வந்த அடுத்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பணம் குவியத் தொடங்கும்.

சம்பள பணம் கை வந்த அடுத்த நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாசலில் சாணம் தெளித்து,சாணம் இல்லாதவர்கள் தண்ணீரில் தெளிக்கவும்.

பிறகு அரிசி மாவில் புள்ளி வைத்த கோலம் ஒன்றை போடவும்.அதன் நடுவில் ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.

பிறகு உங்கள் சமையலறைக்கு சென்று ஒரு பட்டை துண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் உங்கள் சம்பள பணத்தில் இருந்து ரூ.100,ரூ.200 அல்லது ரூ.500 ரூபாய் எந்த ரூபாய் தாள் வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் வைத்துள்ள ரூபாய் தாளில் அரைத்த பட்டை தூளை போட்டு வீட்டு வாசலில் நின்று பண வரவு அதிகரிக்க வேண்டும்,பணக் கஷ்டம் ஏற்படக் கூடாது என்று மனதார நினைத்துக் கொண்டு பட்டை தூளை வாயால் ஊதிவிடவும்.

பட்டை தூள் வீட்டிற்குள் படும்படி தூவி விடவும்.இவ்வாறு சம்பளம் வந்த அடுத்த நாள் செய்தால் வீட்டில் பணம் குவியும்.