தமிழக அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கால்நடை பண்ணை அமைப்பதற்கான மானியங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கால்நடைகளின் உடைய உற்பத்தியை பெருக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை செம்மறி ஆட்டு பண்ணை வெள்ளாட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை போன்றவற்றை அமைத்த இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என முடிவு செய்த 2021 2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவற்றிற்கெல்லாம் எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா :-
✓ கோழி வளர்ப்பு பண்ணை & குஞ்சு பொரிப்பகம் – 25 லட்சம் ரூபாய்
✓ செம்மறி ஆட்டுப்பண்ணை – 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை
✓ வெள்ளாட்டுப் பண்ணை – 10 லட்சும் முதல் 50 லட்சம் வரை
✓ பன்றி பண்ணை – 15 லட்சும் முதல் 30 லட்சம் வரை
✓ தீவன பயிர் சேமிப்பு
✓ தீவன விதைகள் உற்பத்தி
இந்த திட்டங்களின் கீழ் பயன்பட நினைக்க கூடியவர்கள் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் போன்றவர்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம் :-
✓ https://nlm.udyamimitra.in/
✓ http://www.tnlda.tn.gov.in/
✓ http://www.tnlda.tn.gov.in/