தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!!

0
31
do-you-want-to-succeed-in-business-worship-ayudha-puja-at-this-auspicious-time
do-you-want-to-succeed-in-business-worship-ayudha-puja-at-this-auspicious-time

தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!!

ஒவ்வொரு வீட்டிலும் வருடம் தோறும் நவராத்திரி ஆனது கோலாகலமாக கொண்டாடப்படும். அதில் குறிப்பாக ஒன்பதாவது நாள் ஊரெங்கும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதாவது துர்க்கை அம்மன் தொடர்ந்து எட்டு நாட்கள் மகிஷாசுரனுடன் சண்டையிட்டு 9 வது நாள் தான் அவரை வதம் செய்கிறார்.அவ்வாறு வதம் செய்து போருக்காக தாம் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு நன்றி செய்யும் விதமாக இந்நாள் பார்க்கப்படுகிறது.

எனவே இந்த நாளை தான் ஆயுத பூஜை என்று நாம் கொண்டாடி வருகிறோம். தொழில் செய்பவர்கள் அதற்குண்டான ஆயுதங்களை வைத்து பூஜையிட்டு கொண்டாடுவது வழக்கம். அதேபோல சரஸ்வதியின் பூரண அருள் குழந்தைகளுக்கு கிடைக்க அந்நாளில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும் பள்ளிகளில் சேர்ப்பதும் காலகாலமாக நடப்பது ஒன்று. அந்த வகையில் துர்க்கை அம்மனின் அனைத்து கடாட்சமும் கிடைக்க நல்ல நேரத்தில் பூஜை செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

பூஜை செய்ய சுப முகூர்த்த நேரம்:

இந்த வருடம் ஆயுத பூஜை செய்வதற்கு மூன்று நல்ல நேரங்கள் உள்ளது.

அதிகாலை 4.00 மணி முதல் 7.30 மணிக்குள் பூஜை செய்து கொள்ளலாம்.அவ்வாறு பூஜை செய்ய இயலாதவர்கள் காலை 9.05 மணி முதல் 10.25 மணிக்குள் செய்து கொள்ளலாம்.மேலும் மதியம் 12.00 மணி முதல் 2.00 மணிக்குள் செய்து கொள்ளலாம்.

அதேபோல இரண்டாவது நாளான விஜயதசமி அன்று அதிகாலை 6.00 மணி முதல் 8.50 மணிக்குள் பூஜை செய்து கொள்ளலாம் அல்லது முற்பகல் 10.25 மணி முதல் 12.00 மணிக்குள் பூஜை செய்யலாம். இந்த முற்பகல் நேரத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது மேற்கொண்டு நல்ல பலன்களை கிடைக்க வழி வகுக்கும்.

ஆயுத பூஜை அன்று வாயிலில் மா தோரணம் காட்டி தொழில் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் மீது  மஞ்சள் குங்குமம் திலகமிட்டு , அம்மனுக்கென்று நெய்வேத்தியம் படைத்து வழிப்படுவது விசேஷமான ஒன்று.