குளிக்க போறிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து குளித்து பலன்களை பெறுங்கள்!!

0
100
Do you want to take a shower? Then mix this one product with water and take a bath and reap the benefits!!
Do you want to take a shower? Then mix this one product with water and take a bath and reap the benefits!!

சரும அழுக்கு,வியர்வை அனைத்தும் நீங்கி புத்துணர்வுடன் இருக்க குளிக்க வேண்டியது அவசியம்.சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும்.சிலருக்கு வெந்நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும்.ஆனால் வெந்நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.சிலருக்கு குளியல் பொடி கலந்து குளிப்பதை விரும்புவர்.ஆனால் குளிர்ந்த நீரில் கல் உப்பு கலந்து குளித்தால் ஆச்சர்யப்படும் வகையான நன்மைகள் கிடைக்கும்.

கல் உப்பில் இரும்பு,ஜிங்க்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மினரல்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த கல் உப்பை நீங்கும் குளிக்கும் நீரில் கலந்தால் சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிக்கும் நீரில் கல் உப்பு கலந்து குளிக்க வேண்டும்.இப்படி கல் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கல் உப்பு கலந்த நீரில் குளித்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.கல் உப்பு கலந்த நீர் சரும பிரச்சனைகளான முகப்பரு,வறட்சி போன்ற பிரச்சனைகளை போக்கும்.உடல் வலி தசை வலி இருந்தால் கல் உப்பு கலந்த நீரில் குளிக்கலாம்.இதனால் வலிகள் அனைத்தும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.சருமம் பொலிவு பெற குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.கல் உப்பில் உள்ள தாதுக்கள் சருமத்திற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது.எனவே தினமும் குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு கலந்து கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleஎன்னது? ரயிலில் பயணம் செய்தால் இவையெல்லாம் இலவசமாக கிடைக்குமா?
Next articleTNJFU JOB: நோ எக்ஸாம் நேர்காணல் மட்டுமே! மாதம் கை நிறைய சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!