குடும்பத்தில் செல்வ செழிப்பு நிலைத்து இருக்க வேண்டுமா..?? பெண்கள் இதனை மட்டும் கடைப்பிடித்தால் போதும்..!!

Photo of author

By Janani

குடும்பத்தில் செல்வ செழிப்பு நிலைத்து இருக்க வேண்டுமா..?? பெண்கள் இதனை மட்டும் கடைப்பிடித்தால் போதும்..!!

Janani

1. எப்போதும் கோவிலுக்கு செல்லும் பொழுது கடவுளை வணங்குவதற்கு முன்பாகவே தானம் செய்து விட வேண்டும். இதனால் மிகப்பெரிய புண்ணியம் உண்டாகும். ஆனால் கடவுளை வணங்கிய பிறகு தானம் செய்யக் கூடாது. ஒரு சிலர் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் பொழுதே கடவுளை வணங்குவார்கள். அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

2. வெகு தொலைவில் போகும் பொழுது இறைச்சிகளை பச்சையாக வாங்கிக் கொண்டு செல்லக்கூடாது. அதேபோன்று சமைத்த அசைவ உணவினை கொண்டு செல்லும் பொழுது இரண்டு வேப்பிலை மற்றும் அடுப்புக் கரியை போட்டு தான் செல்ல வேண்டும்.

3. உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்களையும், கஷ்டங்களையும் நினைத்து அழுது கொண்டே இருப்பது, புலம்பிக் கொண்டே இருப்பது இதனை தான் தரித்திரம் என்று கூறுவார்கள். மற்ற வீட்டு பெண்கள் அவரது குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை, உங்களது வீட்டில் வந்து சொல்லி புலம்புவது அதுவும் தரித்திரத்தை ஏற்படுத்தும்.

4. அதேபோன்று வீட்டின் மூலைக்கு மூலை அழுக்கு துணிகளையும், குப்பைகளையும் குவித்து வைப்பதும், சாதத்தை நொந்து போக விடுவதும் குடும்பத்தில் தரித்திரத்தை ஏற்படுத்திவிடும்.

5. பெண்கள் முடிவெட்ட நினைப்பவர்கள் வளர்பிறை நாட்களில் முடியை வெட்டினால் அடுத்த முடி வளர்ச்சி ஆனது அதிகரிக்கும். அதேபோன்று அமாவாசை, பௌர்ணமி, பிறந்த கிழமை, ஏகாதசி, விசேஷ நாட்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆண் பெண் இருபாலரும் முடியை வெட்டக் கூடாது.

6. தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகு, பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கினால், நீங்கள் நினைத்து காரியம் நிச்சயம் நிறைவேறும். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இருக்கும்.

7. அதேபோன்று தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுபவர்கள், முதலில் வாசலில் ஒரு தீபத்தை ஏற்றிய பிறகுதான் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். மாதவிடாய் காலங்களிலும், தாம்பத்திய உறவிற்கு பின்பும் வீட்டை சுத்தம் செய்த பின்னர் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

8. வீட்டில் ஏதேனும் ஒரு பொருள் தீர்ந்து விட்டால், இந்த பொருளை வாங்கி வாருங்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பொருள் இல்லை, அந்த பொருள் இல்லை என்று ‘இல்லை’ என்ற வார்த்தையை வீட்டில் அதிகம் பயன்படுத்தக் கூடாது.

9. எந்த ஒரு குபேந்திரன் பொம்மையும் கடையில் வாங்கும் பொழுது, குபேந்திரன் உட்கார்ந்து இருக்கும்படி இருக்கக்கூடிய பொம்மையை தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் நம் வீட்டில் செல்வம் நிலைத்து இருக்கும். குபேந்திரன் பொம்மை வீட்டில் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை போக்கி அதிர்ஷ்டத்தை தரும்.

10. பெண்கள் எப்பொழுதும் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டில் இருக்கக்கூடிய கடவுளை வணங்கிய பிறகு தான் செல்ல வேண்டும். அதேபோன்று கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது.

11. வருடத்தில் மூன்று அமாவாசை நாட்களில், அதாவது ஆடி, புரட்டாசி, தை இந்த மூன்று அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

12. வீட்டில் குளவி கூடு கட்டினால் நல்லது தான். அதற்காக அதை இடிக்காமல் இருக்கக் கூடாது. குழந்தை பேறு வேண்டுபவர்கள் அதனை இடிக்க கூடாது. வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டில் எந்த ஒரு பறவை கூடு கட்டினாலும் மங்களம் உண்டாகி அதிர்ஷ்டம் கிடைக்கும்.

13. நமது வீட்டில் வைத்திருக்கும் காலண்டர் சாமி புகைப்படங்களை கொண்டு இருந்தால், அது முடிந்த பிறகு அதனை கங்கையிலோ அல்லது கிணறுகளிலோ போட்டு விட வேண்டும். வருட கணக்குகளாக பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாது.

14. வீட்டில் காலண்டரை கிழக்கு மற்றும் வடக்கு திசையை பார்த்தவாறு மாட்டுவது தான் சிறப்பு. எக்காரணத்தைக் கொண்டும் மேற்கு மற்றும் தெற்கு திசையை பார்த்தவாறு காலண்டரை மாட்டக்கூடாது.

15. வெள்ளி அன்று நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னர், அம்பாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் சேர்வர். செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும். புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கும்.