நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

0
410

நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமா? பேப்பரில் இப்படி எழுதி வைத்து பாருங்கள்!

நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருப்பது நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒரு பெரிய அளவு பேப்பர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்தக் கூடாது. எந்த கலர் மையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஏலக்காய் அல்லது கிராம்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை சனிக்கிழமை அல்லது புதன்கிழமை இரண்டு தினங்களில் ஏதேனும் ஒரு நாட்களில் இந்த தாந்திரீக முறையை செய்ய வேண்டும்.இதனை விடியற்காலை 4 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும். மேலும் இந்த தாந்திரீகத்தை செய்யும் பொழுது அசைவம் சாப்பிட்டு இருக்க கூடாது எப்போது செய்தாலும் குளித்த பிறகு மட்டுமே செய்ய வேண்டும். முதலில் இந்த பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கின்றதோ அதனை அந்த பேப்பரில் எழுதிக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை செய்பவர்கள் தொழில், நகை மீட்பவர்கள் ,உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டுதல் வைப்பவர்கள் ஏலக்காய் பயன்படுத்த வேண்டும். திருமணத்தடை, கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் போன்ற வேண்டுதல் வைப்பவர்கள் கிராம்பை பயன்படுத்த வேண்டும். உங்களின் வேண்டுதலை அந்த பேப்பரில் ஒரு முறை எழுதிய பிறகு அதில் ஏலக்காய் பயன்படுத்துபவர்கள் ஐந்து ஏலக்காய் அதில் வைத்து மடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கிராம்பு பயன்படுத்துபவர்களும் அந்த பேப்பரில் எழுதியவுடன் ஆறு எண்ணிக்கையில் கிராம்பை வைத்து மடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மடித்து வைத்துள்ள பேப்பரை யாருக்கும் தெரியாத அளவில் வைக்க வேண்டும். மேலும் 48 நாட்களுக்கு நீங்கள் எழுதி மடித்து வைத்துள்ள பேப்பர் முன் நின்று கூற வேண்டும். நீங்கள் பேப்பரில் எழுதி வைத்ததை மட்டுமே கூற வேண்டும். மடித்து வைத்துள்ள பேப்பரை கையில் வைத்து கொண்டு கூட நாம் அந்த வேண்டுதலை கூறலாம்.

48 நாட்களுக்குப் பிறகு அதனை பிரிக்க வேண்டும். வைத்துள்ள ஏலக்காய் அல்லது கிராம்பை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து விட வேண்டும். நாம் எழுதி வைத்துள்ள காகிதத்தை 48 நாள் முடியும் பொழுது எரித்து விட வேண்டும்.

Previous articleவெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!
Next articleமுகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here