உங்கள் மனதில் உள்ள எண்ணம் 3 வாரத்தில் நிறைவேர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் மனதில் உள்ள எண்ணம் 3 வாரத்தில் நிறைவேர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!!

நம் அனைவரும் கல்வி, தொழில், வேலை, பதவி, சம்பள உயர்வு என்று பல விஷயங்களை மனதில் நினைத்து நிறைவேற வேண்டும் என்று அதற்காக விடாது முயற்சி செய்து வருகிறோம்.

ஒருசிலருக்கு அவர்கள் நினைத்தவை உடனடியாக நடந்து விடும். ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

நாம் நினைத்த எண்ணங்கள் உடனடியாக நிறைவேற முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் அவசியம்.

அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று உங்கள் கோரிக்கையை சொல்லி “2 வாரத்திற்கு தினமும் வந்து 1 சிதறு காய் போடுகிறேன் என்று, என் வேண்டுதலை 3 வாரத்தில் நடத்திக் கொடு” என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

தினமும் காலை குளித்தவுடன் கோயிலுக்குச் சென்று 1 சிதறு காய் போட்டு அவரிடம் கோரிக்கையை வைத்து விடவும்.

முக்கியமாக சிதறு காய் போடுவதற்கு முன் இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்து போட்டால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும் என்பது பெரியோர் வாக்கு.

மந்திரம்:

ஓம் சர்வ சக்கர டம்டம் ஸ்வாஹா:

20 நாட்கள் இதே போல் செய்த பிறகு 21 ஆம் நாள் தேங்காய் வாங்கி இதே போல் மந்திரம் சொல்லி சிதறு காய் போட்டு விட்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வீடு திரும்பவும். இவ்வாறு செய்தால் விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.