உங்க குழந்தைகளுக்கு குடற்புழு இருக்கா? அப்படியானால் இதை செய்து பாருங்கள் வயிற்றுப்புழு உடனே வெளியேறும்

Photo of author

By Amutha

உங்க குழந்தைகளுக்கு குடற்புழு இருக்கா? அப்படியானால் இதை செய்து பாருங்கள் வயிற்றுப்புழு உடனே வெளியேறும் 

இன்று அதிக அளவு குழந்தைகளை பரவலாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை குடற்புழு. சுற்றுப்புற சூழல் சுகாதாரம் மோசமாக இருக்கக்கூடிய இன்றைய சூழலில் சுய சுத்தம் குறைவதால் குடற்புழு தொல்லை ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் இளம் வயதினருக்கும் பெரியவர்களுக்கும் கூட ஏற்படலாம்.

இந்த புழுக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக அளவு இனிப்புகள் உண்பது. காய்கறிகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது. கைகளை கழுவாமல் சாப்பிடுவது. நகங்களை சுத்தமாக இல்லாமல் அதிகமாக வளர்ப்பது போன்ற பிரச்சனைகளால் இந்த தொல்லை ஏற்படும்.

இந்த குடற்புழுக்களை எவ்வாறு இயற்கையான முறையில் வெளியேற்றலாம் மற்றும் உருவாகாமல் தடுக்கலாம் போன்ற வழிமுறைகளை பார்ப்போம்.

1. பூசணி விதைகளை வாங்கி வந்து பொடி செய்து கொள்ளவும். பெரியவர்களாக இருந்தால் அரை டேபிள்ஸ்பூன் பூசணி விதை பவுடர் உடன் அரை ஸ்பூன் தேன் கலந்து இரவு படுக்கும் முன்பு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இதுவே குழந்தைகளாக இருந்தால் கால் ஸ்பூன் பொடியுடன் கால் ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து  சாப்பிட்டு வர வேண்டும்.  இதை தூங்கப் போகும் முன்பு மட்டுமே செய்ய வேண்டும்.

இந்த வைத்திய முறையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இதே போல் மூன்று நாட்கள் செய்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள கீரி பூச்சிகள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உங்கள் வயிறு சுத்தமாகி ஆரோக்கியமாக இருக்கும்.

2. அன்னாசி பழத்தை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வர வேண்டும். இதில் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் ஒரு நொதி சுரக்கிறது.

இந்த குடற்புழுக்கள் தான் குழந்தைகள் சரியாக உணவு உண்ணாமல் இருப்பதற்கும் பசியின்மையோடு இருப்பதற்கும் காரணமாகும். இந்த குடல் புழுக்கள் வெளியேறினாலே குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுத்து சாப்பிடுவார்கள்.

நாட்டு மருந்து கடைகளில் வேப்பம்பூ கிடைக்கும். இதை வாங்கி வாரத்தில் ஒரு முறை ரசம் வைத்து சாப்பிட்டு வர குடற்புழுக்கள் நீங்குவதோடு வயிற்றில் எந்தவித தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையான இதை பயன்படுத்துவதன் மூலம் குடற்புழுக்கள் அறவே வராமல் தடுக்கலாம்.