தைராய்டு கட்டி வீக்கத்தை குறைக்க இந்த எண்ணெயை கழுத்தில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

தைராய்டு கட்டி வீக்கத்தை குறைக்க இந்த எண்ணெயை கழுத்தில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

Divya

ஆண்களைவிட பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.இந்த தைராய்டு பாதிப்பினால் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட சித்த வைத்தியத்தை முயற்சி செய்யவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரக எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரக எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்தால் தைராய்டு வலி வீக்கம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம் – 50 கிராம்
2)சதகுப்பை – 50 கிராம்
3)கடுகு – 50 கிராம்
4)சோம்பு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மூலிகை பொடியை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அரைத்த மூலிகை பொடி அரை தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள:-

1)சுக்கு – ஒரு துண்டு
2)கரு மிளகு விதை – ஒரு தேக்கரண்டி
3)அஸ்வகந்தா – 50 கிராம்
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கரு மிளகு,50 கிராம் அஸ்வகந்தா மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இதில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த மூலிகை பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.