அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

Photo of author

By Divya

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

Divya

கால் பாதத்தில் வீக்கம்,வலி இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த கால் பாத வீக்கத்தை குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

கால் வீக்கம் குறைக்கும் வீட்டு வைத்தியம் ஒன்று:

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

கிளாஸ் ஒன்றில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தண்ணீரில் பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த எலுமிச்சை பானத்தை தினமும் பருகி வந்தால் கால் வீங்குவது கட்டுப்படும்.

1)கல் உப்பு
2)தண்ணீர்

ஒரு அகலமான பக்கெட்டில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கல் உப்பு சிறிதளவு போட்டுக் கொள்ள வேண்டும்.

இவை நன்றாக கரைந்த பிறகு கால் பாதங்களை அதில் வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.இப்படி செய்தால் கால் வீக்கம் குறையும்.

1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.இதை லேசாக சூடுபடுத்தி கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

1)பூண்டு பற்கள்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணைய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து கால் பாதங்கள் மீது தடவினால் வீக்கம் வத்தும்.