நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

0
184

பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நாளந்தா மாவட்டத்தில் உள்ள சோஹ்சரை கிராமத்தில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவன் வீட்டில் நடந்துள்ளது.

 

போலீசில் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண் 2006 ஆம் ஆண்டு மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு 13 வயது மகள் மற்றும் 11 வயது மகன் உள்ளதாகவும் கூறினார். “கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் என் கணவர் மருத்துவ அதிகாரியாக (எம்பிபிஎஸ் மருத்துவர்) நியமிக்கப்படும் வரை கடந்த 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை சுமூகமாக நடந்து கொண்டிருந்தது என கூறி உள்ளார். அதன்பின் அப்போதிருந்து, அவரது நடத்தை மாறத் தொடங்கியது. அவர் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்த எனக்கு அழுத்தம் கொடுத்தார். நான் மறுத்தபோது, ​​அவர் என்னை அடித்தார், ”என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

 

இந்த மாதிரியான விஷயம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அதனால் மற்ற ஆண் நண்பர்களுடன் நான் ஒன்றாக இருந்தால் அதை வீடியோவாக எடுத்து என் சுயமரியாதையை கெடுத்து என்னை விவாகரத்து செய்ய விரும்புவதாக கூறினார். சனிக்கிழமை நடந்த சிறிய தகராறில் பிளேடால் அவர் என்னை காயப்படுத்தினர் என்றெல்லாம் அந்த பெண் கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது கொலை முயற்சி ஐபிசி பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பு மற்றும் கையில் கத்திக்குத்து காயங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் மாமனாரிடமிருந்தும் எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த விவகாரம் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. என இந்த வழக்கை விசாரித்த போலீசார் கூறினர்.

Previous articleஇந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மீதான வரியை குறைக்க சொல்லி மன்றாடும் அமெரிக்க கார் நிறுவனம்!
Next articleவெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு