கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!
கொரோனா வைரஸ்
கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப்
போராடிய மருத்துவர் லி வென்லியாங்
கொரோனா வைரஸ்
பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸால் இன்று பலியான சீனர் ஒருவருக்காக அந்த நாடே அஞ்சலில் செலுத்தி வருகிறது. அவர்தான் மருத்துவர் லி வென்லியாங். ஏன் இவருக்காக மொத்த நாடும் அஞ்சலி செலுத்துகிறது என்றால் இவர்தான் முதன் முதலில் டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் தாக்குதலைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அரசுக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனால் கொரோனா வைரஸ் சாவுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இவரையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பாக நேற்றே இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த போது அவருக்கு லேசாக நாடித்துடிப்பு இருந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு நான்கு மணிநேரம் உயிரோடு இருந்தார்.
தன் மூலம் யாருக்கும் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதால் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொண்டார். தொடுதல் மூலம் வைரஸ் பரவுகிறது என அவர் நினைத்ததே இதற்கு முக்கியக் காரணம்.