சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

0
118

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

இந்திய அணி நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்த சாதனை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மோசமான இன்னொரு சாதனையை செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த சாதனையைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சந்தோஷ மிகுதியில் திளைத்தாலும் மற்றொரு புறம் ஒரு மோசமான சாதனையையும் செய்துள்ளது. இதன் மூலம் தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை இழந்துள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு டி 20 போட்டிகள் மற்றும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கபட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 4ஆவது டி 20 போட்டியில் ஒரு ஓவர் தாமதமாகவும், 5-ல் 2 ஓவர் தாமதமாகவும் வீசியது. இதற்காக முறையே போட்டி ஊதியத்தில் இருந்து முறையே 20 மற்றும் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஆனால் அப்பொதும் அந்த தவறை சரிசெய்து கொள்ளாத இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 4 ஓவர்கள் தாமதமாக வீசியது. அதற்காக இந்த போட்டியின் ஊதியத்தில் 80 சதவீதத்தை இழந்தனர். இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசி இருந்தால் மொத்த சம்பளத்தையும் இழந்திருக்கும். கோலி தலைமையிலான அணி வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வரும் வேளையில் கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாமல் தடுமாறி வருகிறது. வரும் போட்டிகளிலாவது இந்த தவறை சரி செய்து கொண்டு மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
Parthipan K