விஜய்யின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

0
224

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

தற்போது டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3 கோடியும், வெளிநாடுகளில் 3 கோடியும் மற்ற மாநிலங்களில் பல லட்சங்களையும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக நேற்று ஒரே நாளில் 9.83 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Previous articleஇனிப்பு வாங்கித் தருவதாக இழுத்துச்சென்று 5 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்.!! புதுச்சேரியில் பரபரப்பு.!!
Next articleதம்பதிகள் இந்த நேரத்தில் உறவு வைத்து கொண்டால் இவ்வளவு பலன்களா?