ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!

0
165

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த ஐந்து திரைப்படங்களில் டாக்டர் படமும் ஒன்று என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தயாரிப்பாளராக, நடிகராக மற்றும் ஒரு நல்ல நண்பராக என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஒத்துழைப்பு அளித்த அனிருத் மற்றும் குடும்பமாகவே இருந்த பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு, மிலிந்த் சோமன், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, இளவரசு ,அருண் அலெக்சாண்டர், தீபா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.

 

Previous articleஉள்ளாடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.! திக்கித்திணறும் ரசிகர்கள்.!!
Next articleதடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!