கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வரும் நெகழ்ச்சி சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகின்றன. என்னதான் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை இருந்து வந்தாலும், பெங்களூரில் தன்னலமற்ற மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று இலவச கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார்.
பெங்களூரை சேர்ந்த மருத்துவர் சுனில்குமார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளை அவர்களுடைய வீடுகளுக்கே தன்னுடைய சொந்த காரில் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
பெங்களூரை சேர்ந்த மருத்துவர் சுனில்குமார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளை பாதுகாக்க அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அதுவும் தன்னுடைய சொந்த காரில் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
மேலும் அவரது சொந்த காரை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி கொரோனா இல்லாதவர்களுக்கும் சேவை செயல்புரியும் மனப்பான்மையில் அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
இவருடைய சிகிச்சையால் பல நோயாளிகள் ஒரு பைசா செலவில்லாமல் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தன்னலமற்ற மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் சுனில் குமார் அவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனித நேயம் இன்னும் மறந்து போகவில்லை என்பதற்கான உதாரணமாக சுனில்குமார் திகழ்கிறார்.