ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

0
57

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.

 

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.

 

நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 2000 கருப்பு பூஞ்சை கேஸ்கள் உள்ளன. ஆந்திராவில் 910 முக்கோர்மிகோசிஸ் நோயாளிகள் உள்ளனர்.

 

இதுவரை 220 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்து உள்ளனர். இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி கருப்பு பூஞ்சை நோயை ஒரு தொற்று நோயாக அரசு அறிவித்துள்ளது.

 

எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ” பூஞ்சைத் தொற்று புதிதல்ல, ஆனால் நோயாளிகளின் விகிதத்தில் இழப்புகள் இருந்ததில்லை. ஒவ்வொரு நாலும் தொற்று நோய் அதிகமாக அவதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. கட்டுப்பாடில்லாமல் இருக்கும் நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள், காற்றோட்ட வசதி இல்லாமல் இருக்கும் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு இதுபோன்ற காரணிகளால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது”. என்று அவர் கூறினார்.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த ஆறு வாரங்களுக்குப் பின் இது மாதிரியான காரணிகள் ஏதேனும் இருப்பின் கண்டிப்பாக பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2-3 வாரங்களுக்கு ஒரே முகக்கவசத்தை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சையின் நோய் ஏற்படலாம். ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து நேரடியாக குளிர் ஆக்ஸிஜனைக் கொடுப்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என கூறினார். கருப்பு பூஞ்சை சம்பவங்களைக் குறைக்க அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு Posaconazole என்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்தை கொடுக்கலாம்” என்று தெரிவித்தார்.

 

 

author avatar
Kowsalya