மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By CineDesk

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அதிகாரி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சைலேந்திர பாபு கூறி உள்ளார். அதாவது,

  1. முழுமையாக விசாரணை நடத்திய பின், அனைத்து வாய்மொழி ஆதாரங்கள் மற்றும் ஆவன ஆதாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  2. அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவரிடமிருந்து கட்டாயமாக வல்லுநர் கருத்துப் பெற வேண்டும்.
  3. இந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட ஆலோசனை பெற வேண்டும். இது தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் அமையும்.
  4. சிகிச்சையின் போது நோயாளி இறந்து விட்டால் , அதற்காக மருத்துவரை கைது செய்யும் அவசியம் இல்லை.
  5. வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆராய வேண்டும்.
  6. வழக்கு தொடர்பான விவரங்கள், சாட்சிகள், ஆதாரங்கள், குற்றம் நடைபெற்ற சூழ்நிலை முதலியவை குறித்த அறிக்கையை காவல்துறை டிஜிபி-க்கு வழக்குத் தொடர்ந்த 24 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.