தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!! நோயாளிகளின் நிலை என்ன!!

Photo of author

By Jeevitha

Chennai: சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட நிலையில் இன்று 14.11.2024 தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் வெளியிட்டுள்ளார்.

கண்ணனுக்கு தெரியும் கடவுள்கள் என்று மருத்துவர்களை கூறுவார். அந்த நிலையில் மருத்துவர் மீது கத்தி குத்து தாக்குதல் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் ஒரு உயிரை காப்பாற்றுவார்கள், ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் இன்று தமிழக முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவசர சிகிச்சைகள் மட்டும் பார்க்கப்படும், மற்ற எந்த விதமான மருத்துவ சேவைகளையும் மருத்துவர்கள் மேற்கொள்ள போவதில்லை என கூறியுள்ளார். மேலும் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்பட கூடாது என்பதற்காகவும் மேலும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதை கருதிக்கொண்டு இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இது மட்டும் அல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசு மருத்துவ கல்லூரி, சுகாதார நிலையங்கள் என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று வேலை நிறுத்த போராட்டம்  நடைபெறும் என மருத்துவர் சங்க தலைவர் செந்தில் கூறியுள்ளார்.