தமிழகத்தில் பரவி வரும் மர்ம நோய்!! இவர்களைத்தான் முதலில் பாதிக்கும்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
334
Doctors warn that the incidence of walking pneumonia is increasing in Tamil Nadu
Doctors warn that the incidence of walking pneumonia is increasing in Tamil Nadu

Walking pneumonia: தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை.

மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது. பருவ காலநிலை மாற்றத்தால்  வாக்கிங் நிமோனியா என்ற நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது சாதாரண காய்ச்சல், சளி பிரச்சினையாக இருக்காது என மருத்துவ குழுவினர் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இந்த வாக்கிங் நிமோனியா என்பது நிமோனியா நோயை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய் ஆகும்.

இந்த நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இந்த நோய்க்கான அறிகுறியாக சளி, காய்ச்சல், தலைவலி,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் இருக்கும். இந்த பாதிப்புகள் இருப்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மேலும், இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயின் தீவிர பாதிப்பு ஏற்படும் வரை அன்றாட வேலைகளை செய்யும் அளவிற்கு உடல் வலிமையாக இருப்பார்கள்.

இந்த நோய் பாதிப்புடைய அவர்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்து போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது தீவிர சிகிச்சை வழங்கினால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில்  பாதிப்புக்கு  உள்ளாகி வருகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நோயினை தடுக்க எளிய முறியாக அடிக்கடி கைகள் கழுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சீரான உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள் தடுக்கும் வழிமுறைகளாக இருக்கிறது.

Previous article2024 ன் தலைசிறந்த கேப்டன் பும்ரா..ஆஸ்திரேலியா வெளியிட்ட வீரர் பட்டியல்!! ரசிகர்கள் பெருமிதம்!!
Next articleஉறுதியானது ரோஹித் ஓய்வு..இதுதான் அவரது கடைசி போட்டி!! வெளியான பரபரப்பு தகவல்!!