மருத்துவரின் எச்சரிக்கை.. இந்த வகை மாத்திரைகள் சாப்பிட்டால் கிட்னி பெயிலியர் உறுதி!!

Photo of author

By Rupa

உங்களில் பலர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இதற்கு உணவு பழக்கவழக்கங்கள்,நீர் அருந்தாமை,சிறுநீர் பாதையில் அழுக்கு,கிருமிகள் தேங்குதல்,சுகாதாரமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.ஆனால் நாம் நல்லது என்று செய்து வரும் சில செயல்களாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும்.

வலி நிவாரணி மாத்திரை

உங்களில் பலர் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பீர்கள்.ஆனால் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரிணி மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மருத்துவர் பரிந்துரையின்றி அளவிற்கு அதிக ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

அதன்படி சிலர் உடல் வலியை போக கடைகளில் வலி நிவாரணி மாத்திரை வாங்கி உட்கொள்வார்கள்.சிலர் மாதம் மற்றும் வருடக் கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள்.இதனால் கட்டாயம் சிறுநீரக பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆன்டிபயாட்டிக் மருந்து

எல்லா வித ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தாது.இருப்பினும் வேங்கோமைசின்,அமிக்காசின்,அமினோ கிளைக்கோசைட் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதித்துவிடும்.\

பிபி மருந்துகள்

உயர் இரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கேன்சர் சிகிச்சை பயன்படும் ஆன்டி-மெட்டபோலைட்ஸ்

மருத்துவர் பரிந்துரையின்றி கேன்சர் சிகிச்சை பயன்படுத்தும் ஆன்டி-மெட்டபோலைட்ஸ் மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இது வீரியம் மிக்க மருந்தாகும்.இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.