ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

0
190
Does a ninth grader need 20 girls? The startling information that came out!
Does a ninth grader need 20 girls? The startling information that came out!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கேரளா மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வெளிமாநிலத்தில் இருந்து புதிதாக வந்து சேர்ந்துள்ளார் மேலும் அந்த மாணவியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் இந்த மாணவியிடம் நெருங்கி நட்பாக பழகி வந்துள்ளான். அந்த மாணவன் மாணவியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று  மாணவியின் பெற்றோரிடமும் பழகி வந்துள்ளான்.

இந்நிலையில் அந்த மாணவி வெளிமாநிலத்திலிருந்து வேறொரு பள்ளிக்கு வந்து சேர்ந்த காரணத்தால் சற்று பயத்தால் தவித்து வந்துள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன் போதை பொருட்களை மாணவியிடம் கொடுத்து இதனை தினமும் எடுத்துக் கொண்டால் மனதில் புது உற்சாகம் பிறக்கும் என்றும் பயம் அனைத்தும் பறந்து போகும் என்றும் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை போதைப் பொருளுக்கு அடிமை ஆகி உள்ளான்.

அந்த மாணவி போதை பொருளை எடுத்துக் கொண்டால் மட்டுமே இரவில் தூங்க முடியும் என்ற நிலைக்கு சென்றுள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் அதனை வீடியோ பதிவாக எடுத்துக்கொண்டு மாணவியை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளான். மேலும் மாணவியின் பெற்றோர்கள் தற்செயலாக மாணவியின் ஃபோனில் இருந்த பலாத்கார வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் மாணவி போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் என்பதையும் அறிந்து அவரை மீட்டு  போதை பொருள் மீட்பு வயநாட்டில் உள்ள போதைபொருள் மீட்பு மையத்தில் சேர்த்தனர். அங்கு இரண்டு வார சிகிச்சைக்கு பின் மாணவி பழைய நிலைக்கு திரும்பிய பின் கண்ணூர் டவுன் போலீசாரிடம் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் இதே போல் இருவதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப் பொருட்களை கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாகி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும் அந்த மாணவனை போலீசார் கைது செய்து போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில்அடைத்தனர்  மேலும் சிறுவர் கோர்டில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்தது. மேலும் போதை பொருட்கள் கடத்தல் கும்பலுடன் இந்த மாணவனுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!
Next articleஅருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.