ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.உணவு வழக்கத்தில் அதிக கவனமாக செலுத்த வேண்டியது முக்கியம்.
அதேபோல் கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.அதிக வெயிலால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவு உயர அதிக வாய்ப்புள்ளது.
கோடையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வழிகள்:
1)அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.இதனால் உடலில் நீரிழப்பு அபாயம் குறையும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
2)மெலிந்த புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
3)தினந்தோறும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.தவறாமல் இன்சலின் மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4)பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெந்தய நீர் பருகலாம்.
5)முழு நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.
6)பாகற்காய் சாறு,கோவைக்காய் சாறு சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
7)உடற்பயிற்சி,நடைபயிற்சி போன்றவற்றை தினமும் செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்கும்.
8)இன்சுலின்,மருந்துகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.இதனால் குளிர்ந்த இடம் அல்லது உலர்ந்த இடத்தில் இதை வைத்து பராமரிக்கலாம்.