சிலவகை உணவுகளால் வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.இதை பேதி என்று அழைக்கின்றோம்.பேதி ஏற்பட்டால் உடல் சோர்வு,மயக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவு,காரமான உணவு வயிற்றுப்போக்கிற்கு காரணமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை முயற்சிக்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)தண்ணீர் ஒரு கிளாஸ்
2)சர்க்கரை ஒரு தேக்கரண்டி
3)உப்பு சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
அடுத்து சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலக்குங்கள்.இந்த நீரை குடித்தால் பேதி உடனே நிற்கும்.இந்த தண்ணீர் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தயிர் சாதம்,இளநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ளலாம்.
பேதிக்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)மாம்பருப்பு 20 கிராம்
2)சுண்டைக்காய் வற்றல் 20 கிராம்
3)மாதுளை தோல் 20 கிராம்
4)நெல்லிக்காய் வற்றல் 20 கிராம்
5)தண்ணீர் ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் மாம்பருப்பு,சுண்டைக்காய் வற்றல்,மாதுளை தோல் மற்றும் நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பொடி 10 கிராம் அளவிற்கு கொட்டி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி ஆறவைத்து குடித்தால் பேதி நிற்கும்.