மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் புற்றுநோய் டாப் 3 வரிசையில் உள்ளது.இந்த நோய் பாதிப்பு வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்.மனிதர்கள் உடலில் கட்டுப்பாடின்றி இந்த புற்றுநோய்கள் வளர்கிறது.
உடல் உறுப்புகளில் உருவாகும் இந்த புற்றுநோய் செல்கள் திசுக்களை சேதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.புற்றுநோய் பாதிப்பு தொற்றுநோய் இல்லையென்றால் உடலில் அவை கட்டிகளாக உருவாகும் பொழுது மற்ற பாகங்களுக்கு பரவி கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.
புற்றுநோய் வகைகள்:
1)வயிற்றுப்புற்றுநோய்
2)வாய் புற்றுநோய்
3)நுரையீரல் புற்றுநோய்
4)குடல் புற்றுநோய்
6)கருப்பை புற்றுநோய்
7)மூளை புற்றுநோய்
8)நிணநீர் குழாய் புற்றுநோய்
9)தொண்டை புற்றுநோய்
10)கணையப் புற்றுநோய்
புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள்:
1)அஜீரணக் கோளாறு
2)உணவு விழுங்குவதில் சிரமம்
3)காய்ச்சல்
4)கடுமையான வயிற்று வலி
5)திடீர் உடல் எடை இழப்பு
6)குமட்டல்
7)வாந்தி
8)உடல் சோர்வு
9)பசியின்மை
10)மலத்தில் இரத்தம் வெளியேறுதல்
புற்றுநோய் வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.தற்பொழுது பின்பற்றி வரும் உணவுப் பழக்க வழக்கத்தால் கேன்சர் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.சிலவகை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும் உணவுகள்:
1.மாட்டிறைச்சி
சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
2.கருவாடு
உப்பில் பதப்படுத்தி தயாரிக்கப்படும் கருவாட்டை அடிக்கடி சாப்பிட்டால் மூக்கில் புற்றுநோய் பாதிப்பு உருவாகிவிடும்.
3.புகையில் தயாரிக்கும் உணவுகள்
அசைவ உணவுகளை நெருப்பில் வாட்டி சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
4.ஊறுகாய்
ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும்.
5.குளிர்பானங்கள்
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை அதிகமாக பருகினால் கணையப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,மைக்ரோவேவ் உணவுகள் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும்.