இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் உடலுக்கும் எலும்புகள்தான் பலமே.இதனால் உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நம் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த பெரும் உதவியாக இருக்கிறது.காய்கறி,உலர் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.
அதேபோல் கருப்பு எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.இதில் கால்சியம் சத்து அதிகமாக கொட்டி கிடக்கிறது.கருப்பு எள்ளை வறுத்து சாப்பிட்டு வர எலும்புகளுக்கு பலம் கூடும்.மூட்டு பகுதியில் உள்ள இணைப்பு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கருப்பு எள்ளை சாப்பிடலாம்.
தினமும் காலையில் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.தேங்காயில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை சாப்பிட்டால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
நார்ச்சத்து,வைட்டமின் சி,வைட்டமின் ஏ போன்ற சத்து நிறைந்த கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பாதாம் பருப்பில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிளாஸ் பசும் பாலில் பாதாம் பேஸ்டை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பிரண்டை பொடி சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.புரதச்சத்து நிறைந்த முட்டை,வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
எலும்பு வலிமை அதிகரிக்க குடிக்க வேண்டிய பானம்:
1)பாதாம் பருப்பு
2)பிஸ்தா பருப்பு
3)தேங்காய் துண்டுகள்
4)கசகசா
5)கற்கண்டு
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு கப் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை பாத்திரம் ஒன்றில் ஊற்றில் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி கசகசா,அரைத்த முந்திரி,பிஸ்தா பொடி மற்றும் சுவைக்காக சிறிது கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.