நமது குடல் பகுதியில் அதிக நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் கெட்ட பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிவிடும்.இதனால் குடற்புழுக்கள் உருவாகி பலவித தொந்தரவுகளை கொடுக்கும்.நமது குடலில் கழிவுகள் தேங்கி இருந்தால் குடல் அலர்ஜி பாதிப்பு உண்டாகும்.
அதோடு வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை சேர்த்து அனுபவிக்க நேரிடும்.குடலில் தேவையற்ற கழிவுகள் குவிந்தால் வயிற்று வலி,வயிறு பிடிப்பு,உடல் மந்த பிரச்சனை அதிகமாக ஏற்படும்.
குடலில் உள்ள கழிவுகள் வெளியேற,குடல் புண்கள் குணமாக,அசிடிட்டி பிரச்சனை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.
வயிற்றில் அதிக கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க ஓட நேரிடும்.குடலில் உள்ள கழிவுகளை அகற்ற எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.இதனால் எளிதில் மலக் கழிவுகள் வெளியேறும்.
குடலில் உள்ள புண்கள் குணமாக மணத்தக்காளி,சுண்டைக்காய் போன்றவற்றை தினசரி சாப்பிட வேண்டும்.வயிறு எரிச்சல் குணமாக தினமும் காலையில் ஒரு பழைய சாதம் குடிக்க வேண்டும்.துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.வாழைப்பூவில் கசாயம் செய்து குடித்தால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
வயிறு எரிச்சல் குணமாக காலையில் தயிர் மற்றும் மோர் சாப்பிட வேண்டும்.அத்தி பிஞ்சை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.சாப்பிட்ட உடன் மலம் கழிக்க காரணம் குடற்புழுதான்.இதற்கு மணத்தக்காளி காயை,வேப்பிலை,பாகற்காய் போன்ற கசப்பானவற்றை வைத்து ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கசப்பு உணவுகள் குடலில் உள்ள புழுக்களை அழிக்கும்.அதிக இனிப்பு உணவுகள்,காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுகபேதி முறையை முயற்சிக்க வேண்டும்.வயிற்றை குளிர்ச்சியாக்கும் இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும்.இவற்றை செய்து வந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை ஏற்படாது.