ஊறுகாய் சாப்பிட்டால் கிட்னி ஆரோக்கியம் பாதிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

Photo of author

By Divya

ஊறுகாய் சாப்பிட்டால் கிட்னி ஆரோக்கியம் பாதிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

Divya

சிறுநீரகம் நமது உடல் கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உடலில் தேங்கும் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.

சிறுநீரகத்தில் அழுக்கு,உப்பு,யூரிக் அமிலம்,கற்கள் படியாமல் பார்த்துக் கொண்டாலே அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை காக்க செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்.

உடலுக்கு போதுமான நீரை பருக வேண்டும்.சிறுநீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.உப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சிறுநீர் வந்தால் அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்:

1)சோடா
2)அசைவ உணவுகள்
3)வெண்ணெய்
4)ஊறுகாய்
5)துரித உணவுகள்

இந்த ஐந்து உணவுகளை தவிர்த்தால் சிறுநீரக ஆரோக்கியம் அதிகரிக்கும்.இவற்றில் அதிக உப்பு நிறைந்திருக்கிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உப்பு அதிகமாக தேங்கிவிடும்.அதேபோல் யூரிக் அமில அளவு அதிகரித்துவிடும்.எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

கிட்னி ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்:

1)முட்டைகோஸ்
2)ப்ளூபெர்ரி
3)கருப்பு மிளகு
4)வெள்ளைப்பூண்டு பல்
5)முட்டையின் வெள்ளைக்கரு

இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.முட்டைகோஸில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் ப்ளூபெர்ரியில் கால்சியம்,பொட்டாசியம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

கருப்பு மிளகில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வெள்ளிப்பூண்டு சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் முட்டையின் வெள்ளைக்கரு சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.