தலை சீவினாலே முடி கொத்து கொத்தாக கொட்டுதா!! காடு போல் முடி வளர இந்த ஆயிலை அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.மன அழுத்தம்,தலைமுடிக்கு தேவையான சத்து கிடைக்காமை,தலையை முறையாக பராமரிக்காமை போன்ற காரணங்களால் தலைமுடிகள் உதிரத் தொடங்குகிறது.

இந்த தலைமுடி உதிர்வை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:

அன்னாசி பூ
விளக்கெண்ணெய்

செய்முறை விளக்கம்:

10 அன்னாசி பூவை ஒரு கடாயில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 200 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் எண்ணெயை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு குளிர்வித்து பிறகு ஒரு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.தினமும் இரவு நேரத்தில் தலை முடிகளின் வேர்காள் பகுதியில் இந்த அன்னாசி பூ எண்ணெயை அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் மூடி உதிர்வு நின்று புதியதாக முடி வளரும்.

தேவையான பொருட்கள்:

அன்னாசி பூ
ஆலிவ் ஆயில்

செய்முறை விளக்கம்:

ஒரு கடாயில் 150 மில்லி ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அதில் இரண்டு அன்னாசி பூ சேர்த்து கொதிக்க விடவும்.இதை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியான வளரும்.

தேவையான பொருட்கள்:

அன்னாசி பூ
தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் மூன்று அன்னாசி பூ சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

அன்னாசி பூ
தயிர்

செய்முறை விளக்கம்:

10 கிராம் அன்னாசி பூவை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கப்பில் இரண்டு தேக்கரண்டி தயிர் ஊற்றி அன்னாசி பூ பொடி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.இதை தலை முடிகளுக்கு அப்ளை செய்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.