இக்காலத்து உணவுமுறை பழக்கத்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தால் அல்சர்,வயிற்றுப்புண்,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதில் வயிறு எரிச்சல் பிரச்சனை ஏற்பட்டால் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.வயிற்றில் அதிகளவு அமிலம் உருவாவதால் வயிறு எரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பு மோசமடைந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
வயிறு எரிச்சலுக்கான காரணங்கள்:
*காரமான உணவு
*பதப்படுத்தப்பட்ட உணவு
*சூடான உணவு
*செரிமானப் பிரச்சனை
வயிறு எரிச்சல் அதிகமாகி கொண்டே இருந்தால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம்.
வயிறு எரிச்சலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:
1)ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகி வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
2)லெமன் சாறு
இரைப்பையில் உள்ள அமிலத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் பாதி எலுமிச்சம் பழ சாறை பிழிந்து பருகி வரலாம்.
3)தயிர்
தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொண்டால் வயிறு எரிச்சல் குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் பால் பருகி வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
4)மூலிகை தேநீர்
அதிமதுரம் பயன்படுத்தி தேநீர் செய்து பருகி வந்தால் வயிறு எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
5)இஞ்சி தேநீர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சி இடித்து போட்டு கொதிக்க வைத்து வடித்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
6)தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
7)துளசி,புதினா போன்றவற்றை கொண்டு டீ செய்து பருகி வந்தால் வயிறு எரிச்சல் நீங்கும்.
8)சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
9)வெந்தயத்தை பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை சரியாகும்.