சர்க்கரை நோய் நம் இந்தியர்களை பாடாய் படுத்தி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றது.இதனால் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது அரிசி உணவுகள்தான்.அரிசியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.
இதனால் வாழ்நாள் முழுவதும் நாம் சர்க்கரை அளவு உயராமல் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.மருந்து மாத்திரையோடு சில ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
அந்தவகையில் சிறு தானிய உணவான ராகி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்றவை அதிகமாக இருக்கிறது.ராகியை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
ராகியை உணவாக சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.உடல் வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்றவை ஏற்படாமல் இருக்கும்.ராகியில் கஞ்சி,கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ராகியில் இட்லி,ராகி தோசை,ராகி இடியாப்பம்,ராகி ரொட்டி,ராகி சேமியா என்று எப்படி சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.அரிசியை காட்டிலும் ராகியில் கிளைசெமிக் என்ற குறியீடு குறைவாக இருக்கின்றது.இதனால் ராகி உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தவையாக உள்ளது.
ராகியில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சிலருக்கு ராகியில் கஞ்சி,கூழ் செய்து சாப்பிட்டு அலுத்து போயிருக்கும்.அவர்கள் ராகி மாவில் தோசை,ரொட்டி,பக்கோடா,அடை போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம்.
தற்பொழுது ராகி சேமியா பிரபலமான உணவாக உள்ளது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் ராகி சேமியா செய்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.