உங்களில் சிலர் Vertigo அதாவது தலைசுற்றல் உணர்வை அடிக்கடி அனுபவித்து வரலாம்.திடீரென்று தலையை அசைக்கும் பொழுது உலகமே சுற்றுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.தலை சுழல்வது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த வெர்டிகோ பிரச்சனையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிடுகிறது.
உடல் நலப் பிரச்சனை குறிப்பாக காது மற்றும் மூளை நரம்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் இந்த வெர்டிகோ பாதிப்பு ஏற்படும்.வெர்டிகோவில் பெரிபெரல் வெர்டிகோ,சென்ட்ரல் வெர்டிகோ என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் மூளைதொடர்பான தலைசுற்றல் பிரச்சனை சென்ட்ரல் வெர்டிகோவால் ஏற்படுகிறது.
அதேபோல் காது தொடர்பான தலைசுற்றல் பிரச்சனை பெரபெரல் வெர்டிகோவால் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல்,மூளையில் கட்டி இருத்தல்,இரத்த ஓட்டம் குறைதல் போன்ற காரணங்களால் சென்ட்ரல் வெர்டிகோ பிரச்சனை ஏற்படுகிறது.
காதுகளில் மெனியர்ஸ் பாதிப்பு,வெஸ்டிபுலர் நியூரிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் பெரிபெரல் வெர்டிகோ பிரச்சனை ஏற்படும்.
வெர்டிகோ அறிகுறிகள் எப்படி இருக்கும்?
அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படும்
வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்
உடல் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படும்
பேசுவதில் சிரமம் ஏற்படும்
சமநிலையில் மாற்றம்
வெர்டிகோ பிரச்சனையை தடுப்பது எப்படி?
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண வேண்டும்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.
உங்களுக்கு திடீர் தலைச்சுற்றல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
வெர்டிகோ பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.இந்த வெர்டிகோ தீவிர உடல் நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.வெர்டிகோ பிரச்சனை இருந்தால் நீங்கள் MRI,CT ஸ்கேன் செய்து உடல்நிலை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
வெர்டிகோ பாதிப்பை அலட்சியமாக கருதி எந்தஒரு சிகிச்சையும் மேற்கொள்ளவிட்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள்.எனவே உரிய மருத்துவ சிகிச்சை மூலம் வெர்டிகோ பாதிப்பை சரி செய்து கொள்ளுங்கள்.