ஸ்மோகிங் பழக்கத்தால் நுரையீரல் டேமேஜ் ஆகிடுச்சா? அதன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும் எளிய வழிகள்!

Photo of author

By Divya

ஆண்களுக்கு இருக்கக்கூடிய தீய பழக்கங்களில் முதன்மையானது புகைப்பிடிப்பது.உங்களின் இந்த தீய பழக்கம் உங்கள் குடும்பத்தின் நிம்மதி மற்றும் சந்தோஷத்தை கெடுத்துவிடும்.ஒரு சிலருக்கு புகைப்பழத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்திருந்தாலும் அதை நிறுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

ஒருவருக்கு நீண்ட காலமாக புகைப்பழக்கம் இருந்தால் அது நுரையீரலின் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்து உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவிடும்.நாம் சுவாசிக்க நுரையீரல் என்ற உறுப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும்.நுரையீரல் சேதமடைந்தோலோ,அதன் செயல்பாட்டில் தடை ஏற்பட்டாலோ அது உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

புகைப்பழக்கத்தை தவிர்த்து காற்று மாசுபாட்டாலும் நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இந்த நுரையீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகளை அகற்ற இயற்கை பானத்தை பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)மஞ்சள் பொடி
2)பசும் பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி மஞ்சள் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய கழிவுகள் நீங்குவதோடு நுரையீரல் வீக்கம் குறையும்.

தேவையான பொருட்கள்:

1)இஞ்சி
2)எலுமிச்சை சாறு

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.இந்த பானத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய அழுக்குகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:

1)துளசி
2)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் பத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.இந்த பானம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

1)புதினா
2)அதிமதுரம்
3)பட்டை
4)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 புதினா இலைகளை போட்டு கொதிக்க விடவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அதிமதுரம் பொடி,ஒரு துண்டு பட்டை சேர்த்து கொதிக்க வைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் நுரையீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.