சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், வைகோ போன்றோர் எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் உபயோகிக்காமல் திமுகவிற்கு ஆதரவாகவே இந்த சம்பவம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள CPM கட்சி மாநில தலைவர் ஷண்முகம் அவர்கள் முதல்வரை கடுமையாக சாட்டியுள்ளார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று என முதல்வர் சொல்வது ஏற்புடையதல்ல. இந்த மாதிரி சொல்லி கொலையை நியாயப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.
அஜித்குமாரை காவல்துறை அடித்து கொலை செய்திருக்கிறது என்று ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் கூட்டணி தலைவர் ஷண்முகம். சண்முகத்தின் இந்த பேச்சு திமுக விசிறிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.