திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது.
மேலும் அதன்படி பெண் கல்வியை ஊக்குவிக்க நிதி உதவி மற்றும் பெண்களிடம் பொருளாதாரத்தை பெருக்கும் வகையில் கறவை மாடுகள், ஆடு ,கோழிகள் உள்ளிட்டவை வழங்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இந்நிலையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பவுன் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தாலும் கடந்த ஆட்சி காலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தாலிக்கு தங்கம் நிதி உதவி காலதாமதம் இல்லாமல் செயல்படுத்த திமுக அரசு முயல் மேற்கொண்ட வேண்டும் மாவட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திருமண உதவித்திட்டமூலம் தாளிக்கு தங்கம் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படாமல் கிடப்பில் போட்டுள்ளதாக திருமணமான பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட சார்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.