பொதுவாக அரசு பணியில் வேலை பார்க்கும் தந்தை இறந்து விட்டால் அவரது வேலையை அவருடைய மகன் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் நடைமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது அதில் பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவதற்கு இருக்கின்றனர்.
அதாவது அரசு பணியில் பணி புரியும் தந்தையினுடைய மகள் அவர் இறப்பதற்கு முன்பாகவே விதவையாக இருந்தால் அவருக்கு தந்தையின் உடைய பணியை பெறுவதற்கு முழு தகுதி உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடந்த உண்மை சம்பவம் பின்வருமாறு :-
அலகாபாத்தில் உள்ள தந்தை ஒருவர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் இறந்த பிறகு, அவரது மகள் அவரது வேலையில் பணிபுரிய தகுதியற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.
அதனால் அந்த பெண், நான் விதவை என்பதால், கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்பின், இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், விதவையான பிறகு, அந்தப் பெண் தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வசித்து வந்தார். தனக்கு வேலை ஒதுக்கப்பட்டால், குடும்ப உறுப்பினர்களை தன்னால் முடிந்தவரை கவனித்துக் கொள்ள முடியும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதனால் திருமணமாகி விதவையான பிறகும் பெண் மகள் என்ற பகுதியில் தான் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு :-
தந்தை இறப்பதற்கு முன் மகள் விதவையாகிவிட்டதால், சட்டப்படி தந்தையின் சலுகைகளை ஏற்க அவளுக்கு முழு உரிமையுண்டு.