பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உப்பை இப்படி பயன்படுத்தி கட்டுப்படுத்துங்கள்!

Photo of author

By Divya

பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? உப்பை இப்படி பயன்படுத்தி கட்டுப்படுத்துங்கள்!

ஆணோ,பெண்ணோ தங்களது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் அவ்விடத்தில் அரிப்பு,எரிச்சல்,துர்நாற்றம் போன்ற ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

பிறப்புறுப்பு பகுதியில் அதிகளவு முடி இருந்தால் அங்கு பூஞ்சை தொற்று உருவாகி அரிப்பை ஏற்படுத்தும்.இதனால் பொது இடங்களில் அசௌகரிய நிலையை உணரக் கூடும்.பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்கள்,ஹார்மோன் பிரச்சனை,கருத்தரித்தல் போன்ற நிகழ்வின் போது பூஞ்சை தொற்று பாதிப்பை சந்திக்க கூடும்.

அது மட்டுமின்றி ஆண்,பெண் அனைவரும் ஈரமான உள்ளாடைகள் அணிவது,இறுக்கமான உள்ளாடைகள் அணிவது,அந்தரங்கத்தை முறையாக சுத்தம் செய்யத் தவறுவது போன்ற காரணங்களால் அரிப்பை சந்திக்கின்றனர்.

அறிகுறிகள்:-

1)பிறப்புப்பகுதியில் அதிகளவு வெள்ளைப்படுதல் வெளியேறுதல்
2)சிறுநீர் கழிக்கும் பொழுது அரிப்பு,எரிச்சல் உண்டாகுதல்
3)உடலுறவில் ஈடுபடும் பொழுது வலி ஏற்படுதல்
4)ஆண்களுக்கு ஆண்குறியில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுதல்
5)ஆண்குறியில் தடிப்பு காணப்படுதல்

பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்பை குணமாக்குவது எப்படி?

*குளிக்கின்ற நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து குளித்தால் பிறப்புறுப்பு தொற்றுகள் சரியாகும்.

*ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் 1/2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் சேர்த்து பிறப்புறுப்பு பகுதியை துடைத்தால் அழுக்கு,கிருமிகள் அனைத்தும் நீங்கும்.

*ஒரு தேக்கரண்டி பூண்டு எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வைட்டமின் ஈ எண்ணையை கலந்து பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்தால் அரிப்பு,தொற்று ஏற்படுவது தடுக்கப்படும்.

*பிரஸ் கற்றாழை ஜெல்லை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் அரிப்பு ஏற்படுவது கட்டுப்படும்.

*ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் அரிப்பு நீங்கும்.