வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!

Photo of author

By Amutha

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!! 

எந்த ஒரு ரசாயன பொருட்களின் உதவியும் இன்றி இயற்கையாக கிடைக்கும் ஒரு சில பொருட்களை வைத்து உங்கள் வீடு முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என இங்கு காணலாம்.

*** ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் புதினா இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். தண்ணீர் நன்கு சூடேற இதிலிருந்து நறுமணம் வீச துவங்கும். இந்த வாசமானது குறைந்தது 6 மணி நேரங்கள் உங்களது வீட்டில் தங்கி இருக்கும்.

*** வீட்டில் குப்பைகளை சேகரித்து வைக்கும் தொட்டியில் குப்பைகளை சேர்ப்பதற்கு முன்பு எலுமிச்சம் பழத்தை நறுக்கி தேய்த்து விட குப்பைகளில் இருந்து வீசும் ஒவ்வாமை வாடையானது தவிர்க்கப்படும்.

*** ஒரு சிறிய கோப்பையில் 3 ஸ்பூன் சோடா உப்புடன், கால் ஸ்பூன் ஜவ்வாது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். கலந்த பின் இந்த கோப்பையை காகிதத்தால் மூடி வீட்டின் ஒரு மூலையில் வைத்து விட வீடு எங்கும் நறுமணம் வீசும்.

*** நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தசாங்கம் என்னும் தூப பொடியினை சிறிதளவு சாம்பிராணி பொடியுடன் சேர்த்து எரித்து அதில் இருந்து வரும் புகையை வீடு எங்கும் உலவ விட நல்ல மனம் வீசும்.

*** கால் லிட்டர் ரோஸ் வாட்டருடன், ஒரு ஸ்பூன் மஞ்சள், அரை ஸ்பூன் ஜவ்வாது, ஒரு ஸ்பூன் வசம்பு, அரை ஸ்பூன் பச்சை கற்பூரம், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை வீடு துடைக்க உதவும் தண்ணீரில் கலந்து வீட்டை துடைக்க நல்ல பலன் கிடைக்கும்.

*** வீட்டிற்குள் காற்று வரும் வழிகளான ஜன்னல் வாசல் ஓரங்களில் இந்த லவங்கப்பட்டையை வைத்து விட வீடு முழுவதும் நல்ல மணம் வீசிக்கொண்டே இருக்கும்.