வெளியே செல்லும் போது இந்த வாயு தொல்லை அசவுகரியத்தை உண்டாக்குகிறதா.. இதை 1 முறை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

மனிதர்கள் வாயுக்கள் வெளியிடுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் வயிறு உப்பசம்,அடிக்கடி காற்று பிரிதல்,புளித்த ஏப்பம்,கடும் துர்நாற்றத்துடன் வாயுக்களை வெளியேற்றுதல் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

இந்த கடுமையான வாயுத் தொல்லை மானம் சம்மந்தபட்ட பிரச்சனை என்பதால் அதற்கு உரிய தீர்வு காண வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

வீட்டு வைத்தியம் 01:

*எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
*பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்.

உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் எலுமிச்சை பானம் பருகினால் வாயுத் தொல்லை ஏற்படுவது கட்டுப்படும்.

வீட்டு வைத்தியம் 02:

*திரிபலா சூரணம் – ஒரு ஸ்பூன்
*தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் தண்ணீரை சூடாக்கி கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து பருக வேண்டும்.வாயுத் தொல்லையில் இருந்து விடுபட இந்த திரிபலா பானத்தை பருகலாம்.

வீட்டு வைத்தியம் 03:

*பெருங்காயம் – ஒன்று
*தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு கட்டி பெருங்காயத்தை வறுத்து பொடியாக்கி சூடான நீரில் கலந்து பருகி வந்தால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் சேர்வது கட்டுப்படும்.

வீட்டு வைத்தியம் 04:

*சீரகம் – ஒரு ஸ்பூன்
*ஓமம் – ஒரு ஸ்பூன்
*சோம்பு – ஒரு ஸ்பூன்
*தண்ணீர் – ஒரு கப்

வாணலியில் சீரகம்,ஓமம் மற்றும் சோம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அரைத்த பொடியை போட்டு கொதிக்க வைத்து பருகினால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.

வீட்டு வைத்தியம் 05:

*இஞ்சி துண்டு – ஒன்று
*தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு துண்டு இஞ்சியை இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.