திமுக எம்பி ஆ.ராசா கூறியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் அவர் மருமகனுக்கும் பொருந்துமா? – ஈபிஎஸ் சரமாரி கேள்வி  

0
132
Does what DMK MP A. Raza said apply to Stalin's family and his son-in-law? - EPS barrage question
Does what DMK MP A. Raza said apply to Stalin's family and his son-in-law? - EPS barrage question

திமுக எம்பி ஆ.ராசா கூறியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் அவர் மருமகனுக்கும் பொருந்துமா? – ஈபிஎஸ் சரமாரி கேள்வி

இந்து மதம் குறித்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா  குறிப்பிட்ட அந்த வார்த்தை அவர் கட்சி தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா ? அவரது மருமகனுக்கு பொருந்துமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தீடீர் பயணமாக டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லியிலிருந்து விமான மூலம்  இரவு கோவை வந்தடைந்தனர். பின்னர்  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷாவை வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்துடன் சந்தி்த்து பேசியதாகவும், அப்போது முக்கியமான சில கோரிக்கைகள் அவரிடம் வைத்துள்ளதாகவும் கூறினார்.

முக்கியமாக கோதாவாரி காவிரி திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் எனவும்,நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை  நிறைவேற்றபட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் போதை பொருள் தடையில்லாமல்  கிடைக்கின்றது,கஞ்சா போன்ற போதை  பொருட்களால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சீரழியும் நிலை உருவாகியுள்ளாதால் இதனை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது தான் இந்த 16 மாத கால ஆட்சியின் சாதனை என்றார். ஓவ்வொருவராக கட்சியிலிருந்து விலகுவது தான் திராவிட மாடல் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு கீழ்தரமானது, இந்து மதத்தை புண் படுத்தும் விதமான பேச்சு எனவும்,இது  வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆ.ராசா குறிப்பிட்ட அந்த வார்த்தை அவர் கட்சி தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா ? அவரது மருமகனுக்கு பொருந்துமா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அவரது கட்சி தலைவர் இந்த கேள்விக்கு  பதில் அளிப்பார் என எதிர்பார்த்தேன், பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய பந்த் வெற்றியில் முடிந்தது என சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் எனவும் அவர் கூறினார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது என்றும், இது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்ததாக சொல்வது தவறானது எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் நாங்க எதுக்காக சென்றோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றோம் எனவும் அவர் அப்போது கூறினார்.

இந்த  திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என கூறிய அவர், வறண்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு தடையில்லாமல் நீர் கிடைக்கும் என்பதால் நதி நீர்  கோரிக்கையை நினைவுபடுத்தவே அவரை சந்தி்தோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பரவும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை எனவும், இது  எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் அப்போது கூறினார்

இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களையும் குழந்தைகளையும் காக்க வேண்டும் எனவும்,மருத்துவ குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து காய்ச்சல் பரவலை தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்தார்.

Previous articleஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி 
Next articleதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது மரணம் அதிகரிப்பு – சீமான் குற்றசாட்டு