மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்று பக்கவாதம்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவர்களுக்கு இந்நோய் வரக் கூடும்.பக்கவாதம் யாருக்கு வருமென்று கணிக்க முடியாது.ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.
மூளைக்கு செல்ல கூடிய இரத்தம் உறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.அதேபோல் மூளையில் இருக்கின்ற இரத்த நாளங்களில் இரத்த கசிவு ஏற்படும் போது பக்கவாதம் உண்டாகிறது.55 வயதை கடந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
பக்கவாதம் ஏற்பட காரணங்கள்:
1)கொலஸ்ட்ரால்
2)உடல் பருமன்
3)மது பழக்கம் மாட்ரிம் புகை பழக்கம்
4)தூக்கமின்மை
5)டயாபடீஸ்
6)இதய நோய்
பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள்:
*உடலில் ஒரு பக்க வெளி உறுப்புகள் மறத்து போதல்
*பேசும் போது குளறுதல்
*பார்வை கோளாறு
*நடப்பதில் சிரமம்
*உடல் பலவீனமாதல்
பக்கவாதத்தை தடுக்கும் வழிமுறைகள்:
உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.உடற்பயிற்சி,ஹெல்தி டயட்,நடைப்பயிற்சி செய்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.கொலஸ்ட்ரால் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
மது மற்றும் புகை பழக்கத்தை விட வேண்டும்.உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பக்கவாத அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.MRI ஸ்கேன்,இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் பக்கவாதத்தில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.