உங்க உடல் எடை மளமளவென குறையனுமா? குஷ்பூவோட ரகசிய டிப்ஸ்!!

Photo of author

By CineDesk

உங்க உடல் எடை மளமளவென குறையனுமா? குஷ்பூவோட ரகசிய டிப்ஸ்!!

CineDesk

Does your body weight decrease significantly? Kushbooda Secret Tips!!

உங்க உடல் எடை மளமளவென குறையனுமா? நடிகை குஷ்பூவோட ரகசிய டிப்ஸ்!!

இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை உடல் எடை அதிகரிப்புதான். இதற்கு காரணம், உடல் உழைப்பு இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மது பழக்கம், மன அழுத்தம்  போன்றவை உடல் எடையை அதிகரிக்கிறது.

நடிகை குஷ்பூ அவருடைய உடல் எடையை ஒரு ஆரோக்கிய பானம் மூலம் வெகு சீக்கிரமாக குறைத்தார். அதை அவரே ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். அது என்ன பானம், அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இந்த பானத்தை தினசரி எடுத்துக் கொண்டதால் தான் குஷ்பூவின் உடல் எடை குறைந்ததாகவும், உடல் எடை குறைவதை உணர முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

தேவையான பொருட்கள்

சீரகம் 1 ஸ்பூன்

பட்டை 2 துண்டு

½ எழுமிச்சம் பழம் மற்றும் தேன்

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அதில் 1 ஸ்பூன் சீரகத்தை போடவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். இந்த தண்ணீர் கொதிக்கும் போது சீரகத்தில் உள்ள எசன்ஸ் அந்த தண்ணீரில் இறங்கும். சீரகம் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், தேவையற்ற கலோரிகளையும் குறைக்கும்.

இந்த சீரக தண்ணீரானது நமது உடலில் உள்ள தேவையற்ற, மற்றும் நீண்ட நாட்களாக கரையாமல் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும் தன்மையுடையது. இதில் அடுத்ததாக 2 பட்டை துண்டுகளை போடவும். சீரகத்தையும், பட்டை தூண்டுகளையும் சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும்.

இந்த தண்ணீரானது நன்றாக கொதித்து ¾ டம்ளர் அளவிற்கு வந்தவுடன் அதை வடிகட்டவும். பிறகு இதில் எழுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்றாக கலந்துக் கொள்ளவும். இந்த பானத்தை அப்படியே பருகலாம் அல்லது உங்களுக்கு தேவைப்பட்டால் 1 ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இல்லையென்றால் சிறிது உப்பு சேர்த்தும் பருகலாம். இதை பருகும் போது உடலில் கொழுப்பு படியாமல் தடுக்கிறது. இதை தினசரி பருகும் போது பசியுணர்வு கட்டுப்படுத்தப் படுகிறது.

இதை உணவுக்கு பிறகு எடுத்துக் கொள்வதால், நீங்கள் சாப்பிடும் உணவில் கொழுப்பு இருந்தாலும் அதை இந்த பானம் உடலில் தங்க விடாது.