உங்கள் குழந்தை கை சூப்புகிறாரா.. இந்த பழக்கத்தை ஓவர் நைட்டில் கன்ட்ரோல் செய்ய செம்ம ட்ரிக்!!
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் நினைவு வரும் வரை பல்வேறு பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர்.குறிப்பாக கை கட்டை விரல் சூப்பும் பழக்கம் பல குழந்தைகளிடம் காணப்படுகிறது.
நம் ஊர் பகுதிகளில் குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த அவர்களின் கை விரல்களில் வேப்பிலை பேஸ்ட்,பாகற்காய்,கற்றாழை ஜெல்,வேப்பெண்ணெய் போன்ற கசப்பான பொருட்களை தடவி விடுவார்கள்.இதனால் கை சூப்ப முடியாமல் குழந்தைகள் அழுகத் தொடங்கும்.ஆனால் இது போன்ற வழிமுறைகளை தவிர்த்து குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலில் குழந்தைகள் எதனால் கை சூப்புகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.பொதுவாக குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டாலோ,தாய் தந்தை அரவணைப்பு கிடைக்கா விட்டாலோ கை சூப்புவார்களாம்.அது மட்டுமின்றி குழந்தைகள் அதிக மன அழுத்தத்தில் இருத்தல்,நீண்ட சிந்தனை போன்ற காரணங்களால் கை சூப்புகின்றனர்.கை சூப்பும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உணர்வு பூர்வ பிணைப்பு இல்லாமல் போவதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கை சூப்புவது வழக்கமாக்கி கொள்ளும் குழந்தைகளின் பால் பற்கள் விழுந்த பின்னர் முளைக்கும் பற்களின் வரிசையை மாற்றிவிடும்.பற்களில் சந்து வருதல்,பற்கள் தூக்கிய நிலையில் இருத்தல் போன்றவை ஏற்படும்.
குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை கன்ட்ரோல் செய்வது எப்படி?
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் நல்ல பழக்கங்களை கற்று தர வேண்டும்.இதனால் கை சூப்பும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாது.