தலைக்கு குளித்தாலும் முடியில் இருந்து சிக்கு வாடை வீசுகிறதா? இதை செய்தால் தலைமுடி மணக்கும்!!

Photo of author

By Divya

தலைக்கு குளித்தாலும் முடியில் இருந்து சிக்கு வாடை வீசுகிறதா? இதை செய்தால் தலைமுடி மணக்கும்!!

உங்கள் தலையில் இருந்து சிக்கு வாடை வீசுவது தொடர்ந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.தலையில் அதிகளவு எண்ணெய் பிசுக்கு,பொடுகு,புண்கள்,அரிப்பு ஏற்பட்டால் சிக்கு வாடை வீசும்.

சிலருக்கு தலை கழுவினால் சில நாட்களுக்கு அந்த வாடை போகும்.சிலருக்கு என்ன தான் வாசனையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு கழுவினாலும் அந்த வாடை மட்டும் நீங்கவே நீங்காது.இதனால் மற்றவர்களுக்கு நிற்க கூட ஒருவித தயக்கம் ஏற்படும்.

குறிப்பாக கணவன்,மனைவிக்கு இவை பெரும் பிரச்சனையாக இருக்கும்.தலை முடியை நறுமணமாக வைத்துக் கொள்ள பலவித பொருட்கள் சந்தையில் விற்க்கப்பட்டாலும் அதை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தலைக்கு பயன்படுவதினால் நல்ல பலன் கிடைக்கும்.

1)அரப்பு
2)அரிசி வடித்த கஞ்சி
3)பன்னீர் ரோஜா இதழ்

ஒரு கைப்பிடி அரப்பு மற்றும் பன்னீர் ரோஜா இதழை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்யவும்.பின்னர் இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்டுத்தும் முறை:-

முதலில் தலையில் எண்ணெய் பிசுக்கு இல்லாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் நன்கு ஆறிய கஞ்சி தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் அரைத்த அரப்பு + பன்னீர் ரோஜா இதழ் பொடி 3 அல்லது 4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் தலையில் நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

1)தேங்காய் எண்ணெய்
2)மல்லிகை பூ
3)கற்றாழை

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 50 கிராம் உலர்த்திய மல்லிகை பூ மற்றும் 2 தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் சத்தம் அடங்கியதும் அடுப்பை அணைத்து ஒரு நாள் முழுவதும் ஆற விடவும்.இந்த எண்ணெயை ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலையில் சிக்கு வாடை ஏற்படுவது தடுக்கப்படும்.

அதேபோல் தயிரில் வேப்பிலை பேஸ்ட் கலந்து தலை முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தாலும் முடியில் ஏற்படக் கூடிய வாடை கட்டுப்படும்.