உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

நம் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி கட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு வீடுகள் வாஸ்து முறைப்படி அமைவதில்லை.

வாஸ்து குறைபாடு இருக்கும் வீட்டில் குடும்ப பிரச்சனை, வறுமை, குழப்பம் போன்றவை தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். அதேபோல் நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த வாஸ்து குறைபாடு நீங்கி நல்லது நடக்க சில பரிகாரங்களை செய்வது நல்லது.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

*பிளாஸ்டிக் டப்பா

*வெட்டி வேர்

*துளசி பவுடர்

*பெருஞ்சீரகம்

*பச்சைக் கற்பூரம்

 

பரிகாரம் செய்வது எப்படி?

ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா எடுத்துக் கொள்ளவும். அதன் மூடியில் கோனுசியை சூடுபடுத்தி ஓட்டைகள் போட்டுக் கொள்ளவும்.

அதில் ஒரு கைப்பிடி அளவு வேர், ஒரு கைப்பிடி அளவு துளசி பவுடர், ஒரு கைப்பிடி அளவு பெருஞ்சீரகம், 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம் போடவும்.

பின்பு நன்றாக மூடி வாஸ்து குறைபாடு எந்த மூலையில் உள்ளதோ அல்லது எந்த ரூமில் உள்ளதோ அங்கு ஓரமாக வைத்து விடவும்.

இதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பழையதைக் கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

துளசி இலைகள் கிடைப்பவர்கள் அதை நன்கு உலர்த்தி பொடி செய்து சேர்க்கலாம். துளசி இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய துளசி இலை பவுடரை வாங்கி சேர்க்கலாம்.

வெட்டிவேர் வாங்கும் போது முதல் ரகம் என்று கேட்டு வாங்கவும். இந்த வெட்டி வேரை 30 ரூபாய்க்கு வாங்கினால் போதுமானது.

இதை வைத்து மறுமுறை மாற்றுவதற்குள் வீட்டில் நல்ல மாற்றம் தெரியும். வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனை தீர்ந்து நல்லது நடக்கத் தொடங்கும்.