வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Divya

மோசமான உணவுப் பழக்கங்கள் வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.இது தவிர உடல் நலக் கோளாறு,அல்சர் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் மற்றவரிடம் பேசுவதில் சிரமம் ஏற்படும்.வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்:-

1)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்
2)வெங்காயம்,பூண்டு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுதல்
3)பற்களை முறையாக துலக்காமை
4)வாய் கொப்பளிக்காமை
5)உணவுத் துகள் பற்களில் ஒட்டியிருத்தல்
6)அல்சர் பாதிப்பு
7)மலச்சிக்கல்
8)புகைபிடித்தல்

வாய் துர்நாற்றம் குணமாக வீட்டு வைத்தியம்:

**தண்ணீர் – ஒரு கிளாஸ்
**கொய்யா இலை பொடி – ஒரு தேக்கரண்டி

வெது வெதுப்பான தண்ணீரில் கொய்யா இலை பொடி சேர்த்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

**ஏலக்காய் – ஒன்று
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஏலக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து பருகி வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.பட்டை தூளை தண்ணீரில் கலந்து பருகினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

**புதினா இலை – ஐந்து
**எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் புதினா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

**கல் உப்பு – சிறிதளவு
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு கல் உப்பு சேர்த்து சூடாக்கி வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

**வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

உரலில் வர கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் இடித்த கொத்தமல்லி விதையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

**வெற்றிலையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.