சுவாசக் கோளாறால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு குறட்டை.இதனால் குறட்டை விட்டு உறங்குபவர்களுக்கு மட்டுமின்றி அருகில் படுபவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.குறட்டை விட்டு உறங்குவது நிம்மதியான தூக்கத்திற்கான அறிகுறி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை ஒரு ஆபத்தான செயலாகும்.உடலில் நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு தான் குறட்டை வரும்.
அதேபோல் அதிக அசதியில் தூங்குபவர்களுக்கும் குறட்டை வரும்.குறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டியது முக்கியம்.மூக்கடைப்பு,சைன்ஸ்,உடல் எடை கூடல்,தொண்டை தொடர்பான பாதிப்புகளால் குறட்டை வருகிறது.
குறட்டைக்கு சிறந்த தீர்வு
பட்டை தூள் தேநீர்
பாத்திரம் ஒன்றில் ஒரு துண்டு பட்டையை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் குறட்டை பாதிப்பு குணமாகும்.
செம்பருத்தி தேநீர்
முதலில் 10 செம்பருத்தி பூவை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி செம்பருத்தி பூ பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் குறட்டை விடுவது குறையும்.
பெருஞ்சீரக தேநீர்
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து 10 கிராம் பெருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள் .
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த பெருஞ்சீரகத் தூளை அதில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் குறட்டை பாதிப்பு குணமாகும்.
அதேபோல் கருஞ்சீரகத்தை பொடித்து தேநீர் செய்து பருகி வந்தாலும் குறட்டை பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.