வயிற்றில் அல்சர் இருந்தால் என்ன உணவு சாப்பிட்டாலும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.அல்சர் பிரச்சனை இருந்தால் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கத் தோன்றும்.அதேபோல் வயிறு கடுப்பு பிரச்சனை,ஆசனவாய் பகுதியில் எரிச்சல்,வாய் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.
இந்த அல்சர் பாதிப்பை குணமாக்க முதலில் நாம் அதற்கு ஏற்றவாறு உணவுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த மற்றும் இயற்கையான குளிர்ச்சி பொருட்களை சாப்பிட வேண்டும்.அல்சர் பாதிப்பை நாம் சித்த வைத்திய முறையை பின்பற்றியும் குணப்படுத்திக் கொள்ளலாம்.
சித்த வைத்தியத்தில் ஏல அரிசி அல்சருக்கு அருமருந்தாக திகழ்கிறது.ஏல அரிசியில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஏல அரிசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிவோம்.
தேவையான பொருட்கள்:-
1)ஏல அரிசி
2பசு நெய்
செய்முறை விளக்கம்:-
ஏல அரிசி என்பது முத்திய ஏலக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் விதையாகும்.இந்த ஏல அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது.
தரமான ஏல அரிசியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.25 கிராம் அளவு கொண்ட ஏல அரிசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
ஏல அரிசி அரை தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜார் அல்லது உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இதை கிண்ணம் ஒன்றில் போட்டு ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,அல்சர் புண்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஏல அரிசி எண்ணெய் – 10 மில்லி
2)தண்ணீர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
10 மில்லி ஏல எண்ணையை கிண்ணம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து காலை நேரத்தில் குடித்தால் வயிறு எரிச்சல்,அல்சர்,வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
அல்சர் குணமாக வெந்தயம்,கற்றாழை போன்ற குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும்.காரமான உணவுகள் மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.