நாம் உணவு உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பசித்தாலோ வயிற்றில் ஒருவித கடமுடா சத்தம் கேட்கும்.இந்த உணர்வை அனைவருமே சந்திக்கிறார்கள்.ஆனால் சிலருக்கு எப்பொழுதுமே வயிற்றுப்பகுதியில் கடமுடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.இந்த சத்தம் வெளியில் கேட்க கூடிய அளவு இருக்கலாம்.அல்லது தாங்கள் மட்டும் உணர கூடியதாக இருக்கலாம்.
நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் இந்த சத்தம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த கடமுடா சத்தம் வாந்தி,வயிற்றுப்போக்கு,வயிற்று வலி போன்றவற்றிக்கான முதன்மை அறிகுறிகளாகும்.
உணவு உட்கொள்ளும் பொழுது வாயை அதிகம் திறந்தால் காற்று அதிகப்படியாக உள்ளே புகுந்து வாயுக்களை உருவாக்கிவிடும்.வயிற்றில் அதிக கெட்ட வாயுக்கள் தேங்கினால் இதுபோன்ற கடமுடா சத்தம் கேட்கும்.
அதேபோல் உடல் எடை இழப்பு ஏற்படும் பொழுது இந்த சததம் வரக் கூடும்.குடலில் உணவு,திரவங்கள் மற்றும் வாயுக்கள் நகரும் பொழுது இந்த சத்தம் வரும்.
வயிற்றில் சத்தம் வர காரணங்கள்:
குடலில் அதிக திரவங்கள் சேர்ந்தால் கடமுடா சத்தம் வரும்.குடலில் அதிக வாயுக்கள் உருவானால் கடமுடா சத்தம் வரும்.குடல் சுவற்றின் தசைகள் சுருங்கும் பொழுது வயிற்றில் சத்தம் வரும்.
வயிற்றுப்போக்கு பாதிப்பை சந்திக்கும் பொழுது வயிற்றில் கடமுடா சத்தம் கேட்கும்.குடலின் செயல்பாடுகள் அதிகரிக்கும் பொழுது வயிற்றில் கடமுடா சத்தம் கேட்கும்.அதேபோல் குடலின் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும் பொழுது வயிற்றில் இப்படி கடமுடா சத்தம் கேட்கும்.உங்கள் வயிற்றில் இருந்து தொடர்ந்து இந்த சத்தம் வந்தால் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.