நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளின் காரணமாக நிரம்ப தொடங்கின.
இதன் காரணமாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதுதான் வைரஸ் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நாம் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு புதுவகையான வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் இதன் காரணத்தினால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பருவநிலை மாற்றத்தாலும் கோரோனோவால் சில வருடங்களாக நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மந்தமான காரணத்தினாலும் மிகவும் ஆபத்தான ‘பார்வோ வைரஸ்’ இந்திய நாய்களுக்கு இடையே அதிவேகமாக பரவி கொண்டு வரப்படுவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து ஒரு வயதுக்கு கீழான பப்பி நாய் குட்டிகளை அதிகம் பாதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
ஏனென்றால் அவைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நாய்களை விட மிகவும் குறைவாக இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து எளிதில் பார்வோ வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. இந்த வைரஸ் தாக்கி அறிகுறிகள் தென்பட்ட உடனே கால்நடை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.
இல்லையெனில் நான்கு அல்லது ஐந்து நாட்களில் இறந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல் அதிகரிப்பு மற்றும் வாந்தி, தீவிர உடல் சோர்வு, உடல் எடை இழப்பு, உடல் பலவீனமடைதல், நீர் இழப்பு மற்றும் ரத்தத்தில் கூட வயிற்றுப்போக்கு இவை அனைத்துமே. இந்த பார்வோ வைரஸால் நாய்களுக்கு தென்படும் அறிகுறிகள் ஆகும்.
மேலும் உடனே கால்நடை மருத்துவரிடம் உங்கள் செல்லப் பிராணியை அழைத்துச் சென்று காட்டவில்லை எனில், உயிரை இழக்க நேரிடும். மேலும் இந்த வைரஸ் உடல் ரீதியான தொடர்பு இல்லாமலேயே ஒரு நாயிடம் இருந்து இன்னொரு நாயிடம் பரவ வாய்ப்பு இருக்கிறது.
பார்வோ வைரஸால் தாக்கப்பட்ட நாய் சாப்பிட்ட உணவை மற்றொரு நாய் சாப்பிட்டால் அதுக்கும் வைரஸ் பரவும். இதன் காரணமாக உங்கள் செல்லப் பிராணியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.